தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழவைத்தார்
1.
கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தட் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார் – தேடி
2.
பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார் – தேடி
3.
நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன் நான் – தேடி
4.
எத்தனை ஆண்டுகளோ நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் என்னை – தேடி